என் மலர்

  செய்திகள்

  எல்லையை தாண்டிய பாகிஸ்தான் பெண்: பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பினர்
  X

  எல்லையை தாண்டிய பாகிஸ்தான் பெண்: பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்லையை தாண்டி வந்த பாகிஸ்தான் பெண்மணியை தடுத்து நிறுத்திய இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், அவரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
  சண்டிகர்:
   
  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அப்போது வயதான பெண்மணி ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டு அவரை தடுத்து நிறுத்தினர்.

  விசாரணையில், அவர் பாகிஸ்தானை சேர்ந்த நிம்மோ என்பதும், கிலா டா ஜவார் பகுதியில் வசிப்பதும், தவறுதலாக எல்லையில் நுழைந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பெண்ணை பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைத்தனர்.

  எல்லை பாதுகாப்பு படையினர் இந்த ஆண்டில் இதுவரை எல்லை தாண்டிய 9 பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×