என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கேரளாவில் வேகமாக பரவுகிறது: டெங்கு காய்ச்சலுக்கு 113 பேர் பலி
By
மாலை மலர்20 Jun 2017 12:07 PM GMT (Updated: 20 Jun 2017 12:57 PM GMT)

கேரளாவில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மாநிலம் முழுவதும் 113 பேர் உயிரிழந்து உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபும், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா போன்ற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இங் குள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அதிகளவு வருவதால் போதிய இட வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மட்டும் 220 பேர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாலராமபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும் அதிக நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போதுமான படுக்கை வசதி இல்லாததால் ஏராளமான நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை நிலவுகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். திருவனந்தபுரத்தில் 4 பேரும், மலப்புரத்தில் 2 பேரும், கோழிக்கோட்டில் 2 பேரும், ஆலுவாவில் 4 பேரும் இறந்துள்ளனர். இந்த வருடம் மட்டும் மாநிலம் முழுவதும் 113 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு சுகாதார சீர்கேடுதான் முதல் காரணமாக உள்ளது. வீடுகள், அலுவலகங்களின் சுற்றுபுறங்களில் குப்பை கூழங்கள் குவிந்து கிடப்பது. பொது இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளில் சேரும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாதது போன்றவை காய்ச்சல் பரவ ஏதுவாகிறது.
இதனால் மாநில சுகாதார துறை அதிகாரிகள் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள்தோறும் சென்று சுற்றுப்புற தூய்மையின் அவசியம் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரதுறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலுக்கு உயிர் பலி அதிகரித்து வருவதற்கு எதிர்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதலா அரசை குறைகூறி உள்ளார். மாநில சுகாதாரதுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நோய் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். இனியாவது காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

Next Story
×