என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பிரதமர் மோடிக்கு அளிக்கும் விருந்தில் பங்கேற்க மாயாவதி, அகிலேஷ் யாதவுக்கு உ.பி. முதல்வர் அழைப்பு
By
மாலை மலர்20 Jun 2017 10:29 AM GMT (Updated: 20 Jun 2017 10:40 AM GMT)

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் விருந்தில் கலந்து கொள்ள வருமாறு முன்னாள் முதல் மந்திரிகளான முலாயம்சிங், மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார்.
லக்னோ:
நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் நாளை (21-ம் தேதி) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள ரமாபாய் டாக்டர் அம்பேத்கர் திடலில் 50 ஆயிரம் பேர் பங்கேற்று யோகாசனம் செய்யும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பிக்கிறார்.

பிரதமரின் வருகையை கவுரவிக்கும் வகையில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சிறப்பு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், பிரதமருக்கு அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள வருமாறு முன்னாள் முதல் மந்திரிகளான முலாயம்சிங், மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பு ஏற்று அவர்கள் இந்த சிறப்பு விருந்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மாநில கவர்னர் ராம் நாயக் மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் யோகாசனம் நடக்கவுள்ள திடலுக்கு நேற்று சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Next Story
×