என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்
    X

    அசாமில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்

    அசாம் மாநிலத்தில் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம் சீன எல்லை அருகே திடீரென மாயமானது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
    புதுடெல்லி:

    அசாம் மாநிலம் தேஸ்பூர் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்ததாக தெரிகிறது. தேஸ்பூரில் இருந்து வடக்கில் 60 கி.மீ. தொலைவில் சென்றபோது, ரேடார் சிக்னலில் இருந்து மறைந்தது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானம் எந்த திசையை நோக்கி சென்றது? என்ன ஆனது? என்பது தெரியவில்லை.

    கடைசியாக ரேடார் சிக்னல் கிடைத்த பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் மீட்புக்குழுவினர் சென்று, காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் சுகோய்-30 எம்கே.ஐ போர் விமானம் ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானம் தரையில் விழுவதற்கு முன்பே, அதில் இருந்த இரண்டு பைலட்டுகளும் வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

    Next Story
    ×