என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. ஆட்சியில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: குஜராத்தில் மோடி பேச்சு
    X

    பா.ஜ.க. ஆட்சியில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: குஜராத்தில் மோடி பேச்சு

    2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்திய வெளியுறவு மற்றும் பொருளாதார கொள்கைகளில் ஆப்பிரிக்காவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
    காந்திநகர்:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமாக குஜராத்துக்கு நேற்று சென்றார். இரண்டாவது நாளான இன்று குஜராத்தில் நடைபெற்ற ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் வருடாந்திர தொடக்க விழாவில் மோடி துவக்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

    பல ஆண்டுகளாக இந்திய - ஆப்பிரிக்கா இடையிலான உறவு மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது. இந்திய வெளியுறவு மற்றும் பொருளாதார கொள்கைகளில் ஆப்பிரிக்காவுக்கு பாஜக 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2014 - 15-ல் இந்தியா - ஆப்பிரிக்கா இடையிலான வர்த்தகம் ரூ.4.70 லட்சம் கோடியாக இருக்கும்
     
    ஆப்பிரிக்காவில் முதலீடு செய்யும் நாடுகளில் 5-வது பெரிய நாடு இந்தியா. கடந்த 20 வருடங்களில் சுமார் 54 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவுடனான கல்வி மற்றும் தொழில்நுட்பம் உறவு குறித்து பெருமிதம் கொள்கிறேன்.

    கிராமங்களில் உள்ள மக்கள் பொருளாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெறுவதில் பெருமளவில் சிக்கல் நிலவி வருகிறது. அதேபோல் பல்வேறு சவால்கள்நம் கண் முன்னே உள்ளது. விவசாயிகள் மற்றும் ஏழைகளை வளர்ச்சி அடைய செய்தல், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவை அதில் முக்கியமானவை. 2018-ம் ஆண்டிற்குள் மின்சாரம் இல்லாத கிராமமே இந்தியாவில் இருக்காது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×