என் மலர்
செய்திகள்

இஸ்ரோ-வுக்கு இந்திரா காந்தி அமைதி விருது - மன்மோகன் சிங் வழங்கினார்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ-வுக்கு இந்திரா காந்தி அமைதி விருதினை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்.
புதுடெல்லி:
இந்திரா காந்தி அமைதி விருது இந்தியாவால் ஆண்டுதோறும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள்நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்திய ரூபாய்கள் ஒரு கோடி ரொக்கத் தொகையும் பாராட்டு சான்றிதழும் பரிசாக கொடுக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டுவரை 29 நபர்கள் இப்பரிசினைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ-வுக்கு இந்திரா காந்தி அமைதி விருது இன்று வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விருதினை வழங்கி கௌரவித்தார். இஸ்ரோ தலைவர் கிரெண் குமார் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

துணை ஜனாதிபதி அமீது அன்சாரி தலைமையிலான குழு கடந்த 2014-ம் ஆண்டு இந்த விருதினை அறிவித்தது.
முன்னதாக 2015-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதினை ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்துக்கு மன்மோகன் சிங் தான் வழங்கினார்.
இந்த விருது ஜெர்மனி சேலஞ்சர் அஞ்சேலா மெர்கல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story