என் மலர்
இந்தியா

விஜயவாடா பேருந்து நிறுத்தத்தில் நடைமேடை மீது பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் பலி
- பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 12-ல் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயவாடா:
விஜயவாடாவில் நேரு பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய நடைமேடையில் அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
இன்று காலை 8.20 மணியளவில் பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 12-ல் பேருந்து மோதி விபத்துக்குள்ளான போது ஏராளமான பயணிகள் திரண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"வாகனத்தைத் திருப்புவதற்குப் பதிலாக, ஓட்டுநர் முன்னோக்கி நகர்ந்து பிளாட்பாரத்தில் மோதினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயவாடா பேருந்து நிலையம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஒரு முக்கிய இணைப்புப் புள்ளியாகும்.
Next Story






