என் மலர்
இந்தியா

மாவு அரைக்கும்போது கிரைண்டரில் சிக்கி 19 வயது ஊழியர் உயிரிழப்பு - பதறவைக்கும் வீடியோ
- மஞ்சூரியன் மற்றும் சைனீஸ் பெல் [Bhel] உணவை தயாரிப்பதற்கு மாவரைக்க கிரைண்டரை சூரஜ் இயக்கியுள்ளார்.
- பாதுகாப்போ பயிற்சியோ இல்லாமல் அவரை கிரைண்டரை இயக்க வைத்துள்ளார் உணவக முதலாளி
மும்பையில் உணவகத்தில் உணவு தயாரிக்கும் போது கிரைண்டரில் சிக்கி 19 வயது ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜார்கண்டை சேர்ந்த 19 வயதான சூரஜ் நாராயண் யாதவ் என்ற இளைஞர் சமீபத்தில் மும்பைக்கு வந்து வோர்லி பகுதியில் உள்ள சாலையோர சீன உணவுக் கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார்.
இந்நிலையில் மஞ்சூரியன் மற்றும் சைனீஸ் பெல் [Bhel] உணவை தயாரிப்பதற்கு மாவரைக்க கிரைண்டரை சூரஜ் இயக்கியுள்ளார்.
அவர் கையை உள்ளே வைத்தபோது, அவரது இடுப்பு உயரத்தில் இருந்த கிரைண்டர் இயந்திரத்தில் அவரது சட்டை மாட்டிக்கொண்டது. அடுத்த சில நொடிகளில் கிரைண்டருக்கு இழுபட்டு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
சூரஜ்க்கு அத்தகைய உபகரணங்களை இயக்குவதில் முன் அனுபவம் இல்லை என்றும் முறையான பாதுகாப்போ பயிற்சியோ இல்லாமல் அவரை கிரைண்டரை இயக்க வைத்த உணவக முதலாளி சச்சின் கோதேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






