Iran War | போர் பதற்றத்திற்கு மத்தியில் லெபனானில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய 177 இந்தியர்கள்

விமான போக்குவரத்து பாதிப்பால் பலர் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.பயண வசதிகளை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தது.
Iran War | போர் பதற்றத்திற்கு மத்தியில் லெபனானில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய 177 இந்தியர்கள்
Published on

புதுடெல்லி:

மத்திய கிழக்கில் போர் காரணமாக விமான போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. விமான போக்குவரத்து பாதிப்பால் இந்தியர்கள் உள்பட பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

இந்நிலையில், முதல் கட்டமாக சுமார் 177 இந்தியர்கள் லெபனானில் இருந்து டெல்லிக்கு பத்திரமாக திரும்பி உள்ளனர் என பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் கத்தாரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு என இரு விமானங்கள் வரவுள்ளன. இந்திய குடிமக்களின் பயண வசதிகளை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com