என் மலர்
இந்தியா

எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு
- ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பயங்கரவாத முகாம்கள் அழித்த நிலையில் இந்திய வான்வெளி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது
- பூஞ்ச், குப்வாரா, அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பயங்கரவாத முகாம்கள் அழித்த நிலையில் இந்திய வான்வெளி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பூஞ்ச், குப்வாரா, அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்தியர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






