search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பத்து நிமிடத்தில் எழுதிய பாட்டு
    X

    பத்து நிமிடத்தில் எழுதிய பாட்டு

    • பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.
    • ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று.

    தம்பி எம்.எஸ்.விஸ்வநாதன் கடுமையான உழைப்பாளி. தூங்குகிற நேரம் மிகவும் குறைவு. நாள் முழுதும் உழைப்பு. இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது.

    "ஊமைத்துரையில் "துரை" என்று வருகிறதே அண்ணே, அவன் வெள்ளைக்காரனா ? என்று ஒருமுறை கேட்டான்.

    காபூல் நகரில் தங்கி இருந்தபோது , "இங்கிருந்துதான் கஜினி முகம்மது நம் நாட்டின் மீது படை எடுத்தான் " என்றேன்

    "யாரண்ணே கஜினி முகம்மது ? என்றான்.

    பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.

    தொழிலில் தளர்ச்சி இல்லாமல் தம்பியும் நானும் கண்ட அந்த எல்லையை, இந்தத் தலைமுறையில் வேறு யாரும் காண முடியாது.

    எல்லோருமே விதைபோட்ட அறுபது நாளில் அறுவடையாகும் கீரைப்பாத்திகள். இரண்டாண்டுகள் ஆட்டம் போட்டுவிட்டு இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போன இசை அமைப்பாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

    ஜூப்பிடரில் நடிகனாகி, ஆபீஸ் பையனாகி, ஆர்மோனிஸ்ட்டாகி, சுப்பராமன் இறந்த பிறகு இசை அமைப்பாளனாகி, எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயில் பல்லவி பாடியவன் தம்பி.

    இசைக்குப் பாட்டா ? பாட்டுக்கு இசையா?

    இரண்டும் பாதிப் பாதி.

    'ஆகாயப் பந்தலிலே'இசைக்கு எழுதப்பட்ட பாட்டு. 'சோதனைமேல் சோதனை'பாட்டுக்குப் போடப்பட்ட இசை.

    "இது நன்றாக இல்லை"என்று என்னிடம் சொல்லக் கூடிய ஒரே இசை அமைப்பாளர், விஸ்வநாதன்.

    'மாலையிட்ட மங்கை'படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று. காரணம், தம்பி விஸ்வநாதனின் இசை.

    நானும் தம்பியும் பத்தே நிமிடங்களில் போட்டு முடித்த பாட்டு, "நெஞ்சில் ஓர் ஆலையத்தில்" வரும் "முத்தான முத்தல்லவோ " நான்கு மாதங்கள் உயிரை விட்ட பாட்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் வரும், "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாட்டு.

    - கவியரசரின் 'சந்தித்தேன், சிந்தித்தேன்' நூலிலிருந்து..

    Next Story
    ×