என் மலர்
கதம்பம்

சக்கரங்களின் பரிணாமம்
- காற்றடைக்கப்பட்ட டயர்களைத் தயாரித்து பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
- எதிர்காலத்தில் ரப்பர் இல்லாத சக்கரங்கள் சந்தைக்கு வரலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த "சார்லஸ் குட்இயர்" என்ற பொறியாளர் 1839 ஆம் ஆண்டு, மிருதுவான ரப்பரில் கந்தகத்தை கலந்து உயர் வெப்பத்தில் அழுத்தினால் கடினமான, ரப்பர் கிடைக்கும் என்று கண்டுபிடித்தார். இந்த செயல்முறை வல்கனைஸிங் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கனமான ரப்பரில் வளையங்கள் செய்து, அதை வாகனங்களின் இரும்புச்சக்கரங்களின் மேற்புறத்தில் பொருத்தியதால் உராய்வு குறைந்து வாகனங்களின் இயங்குதிறன் மேம்பாடு அடைந்தது.
பின்னர்,1895ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் "மிச்செலின் எல்'கிளேர்" என்ற நிறுவனம் "நுமாட்டிக் டயர்" எனப்படும் காற்றடைக்கப்பட்ட டயர்களைத் தயாரித்து பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
1887 இல் டன்லப் நிறுவனம் உட்குழாயை (Tube) சந்தையில் அறிமுகம் செய்து சாதனை புரிந்தது .
1900 களின் முற்பகுதியில், ரப்பர் பற்றாக்குறை மற்றும் முதல் உலகப் போரின் போது டயர்களில் காற்றை நிரப்புவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியர்கள் 1916 இல் ஒரு ஸ்டீல் ஸ்பிரிங் டயரை, வடிவமைத்தனர், ராணுவ வாகனங்களுக்கு ஏற்றதாக இவை கருதப்பட்டன. ஆனால் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை .
எதிர்காலத்தில் ரப்பர் இல்லாத சக்கரங்கள் சந்தைக்கு வரலாம்..
-சுந்தரம்






