என் மலர்tooltip icon

    கதம்பம்

    இளமை தரும் துளசிநீர்
    X

    இளமை தரும் துளசிநீர்

    • தோல் சுருக்கம் நீங்குவதுடன் நரம்புகள் பலப்படும்.
    • மூளைக்கு நல்ல பலம் தந்து ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

    மூலிகைகள் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களை நீரில் ஊற வைத்தோ, கொதிக்க வைத்தோ பயன்படுத்தினால் அதில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கும். காய்ச்சல், கழுத்து வலி, மூட்டு வலியில் தொடங்கி சர்க்கரை நோய், புற்று நோய் என ஏராளமான நோய்களை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் செய்கின்றன.

    துளசி நீர்:

    சுத்தமான செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கைப்பிடி துளசி இலையைப் போட்டு 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். முடிந்தால் இரவில் ஊற வைத்து காலையில் பயன்படுத்தலாம். நன்றாக ஊறிய அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் அருந்தலாம். இதை 48 நாள் தொடர்ந்து அருந்தினால் 448 விதமான நோய்கள் குணமாகும். குறிப்பாக தோல் சுருக்கம் நீங்குவதுடன் நரம்புகள் பலப்படும். தொடர்ந்து குடித்தால் புற்றுநோய் குணமாக வாய்ப்பு உள்ளது.

    வில்வக் குடிநீர்:

    வில்வக் குடிநீர் என்பது வில்வ இலையை ஒரு கைப்பிடி எடுத்து சுமார் நான்கு அவுன்ஸ் நீரில் 8 மணி நேரம் ஊற வைப்பதே. இலையை நீக்கிவிட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத நோய்களையும் குணப்படுத்தும். இந்தக் குடிநீரை அதிகாலையில் ஒரு அவுன்ஸுக்குக் குறையாமல் குடித்தால் வாத வலிகள், மேக நோய்கள் குணமாகும். மேலும் மூளைக்கு நல்ல பலம் தந்து ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

    -மரிய பெல்சின்

    Next Story
    ×