என் மலர்tooltip icon

    கதம்பம்

    இவர்கள்தான் ஏழைகளா..?
    X

    இவர்கள்தான் ஏழைகளா..?

    • அவரிடம் உதவித்தொகை பெற இருந்த மாணவர்கள் பட்டியல் அவர் கைக்கு வருகிறது.
    • கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள்.

    தமிழக முதல்வராக பக்தவச்சலம் இருந்த சமயம் ஒரு முறை அவர், திருச்சிக்கு அருகேயுள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொள்ள அக்கல்லூரிக்கு வந்திருந்தார். அவரிடம் உதவித்தொகை பெற இருந்த மாணவர்கள் பட்டியல் அவர் கைக்கு வருகிறது. அவங்க எல்லாரையும் நான் இப்பவே பாக்கணும் என்றார் தன் உதவியாளரிடம்.

    உடனே அவர் அமர்ந்திருந்த அறைக்கு அம்மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களைப் பார்த்ததும் ஐயா துணுக்குற்றார். அனைவரும் வசதியான வீட்டுப் பிள்ளைகள் போலவே தோற்றமளித்தனர், என்னய்யா இது? இவங்க தான்.. அந்த ஏழைங்களான்னு கர்ஜித்தார்!

    வெலவெலத்து போன கல்லூரி நிர்வாகத்தினர் தங்கள் தவறை உணர்ந்து அவர் காலில் விழுந்தது, ஐயா நாங்கள் இந்த தொகையை ஏழை மாணவர்களுக்குத் தான் கொடுப்போம், இவர்களுக்கு அல்ல என்றனர்.

    அவரது உதவியாளர், "அய்யா இப்ப என்ன செய்யறது.? இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். நாம இப்போதான் இங்க வர்றோம்! இப்ப எப்படி அய்யா ஏழை மாணவர்களை கண்டுபிடிப்பது" எனக்கேட்டார்.

    ஒரு நிமிசம் என சற்றே யோசித்த பக்தவச்சலம் அனைத்து மாணவர்களையும் வரவழைத்து "இதை யார் யார் உங்க கைவசம் வச்சிருக்கிங்களோ அவங்க மட்டும் அதை எடுத்துட்டு வந்து எங்கிட்ட காமிங்க" என்றார்.

    அவர் கேட்டதைக் கொண்டுவந்து தந்த அனைத்து மாணவர்களுக்கும் உடனே உதவித் தொகை தந்துவிட்டு கிளம்பினார். பக்தவச்சலத்தின் அந்த எளிய முறையை கண்டு அனைவரும் வியந்தனர்!

    ஆம் அவர் என்ன கேட்டார் தெரியுமா? மதிய உணவுக்கு தொட்டுக்க யார் யாரெல்லாம் 1 பைசா மட்டை ஊறுகாய் கொண்டு வந்திருக்கிங்க? இது தான் அக்கேள்வி.?

    மதிய சாப்பாட்டுக்கு 1 பைசா மட்டை ஊறுகாய் மட்டுமே வைத்திருப்பவன் நிச்சயம் ஏழையாகத் தானே இருக்க முடியும்! அவ்வளவு நெருக்கடியிலும் பக்தவச்சலம் அய்யாவின் சமயோஜிதத்தை கண்டு அனைவரும் நெகிழ்ந்து மகிழ்ந்து கைதட்டிப் பாராட்டினார்கள்.!

    -வெங்கடேஷ் ஆறுமுகம்

    Next Story
    ×