என் மலர்tooltip icon

    கதம்பம்

    கடந்து செல்லுங்கள்!
    X

    கடந்து செல்லுங்கள்!

    • கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
    • நாம் என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப அவர்கள் சொன்னதையே சொல்வார்கள்.

    ஒரு முறை நடிகவேள் எம்,ஆர். ராதா தனது விலை உயர்ந்த காரை வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்.

    அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது. இதைப் பார்த்த நடிகவேள் எம்,ஆர். ராதா சிரித்தார்.

    இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்

    அதற்கு அவர் மிகவும் சாந்தமாக, "அந்த நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப் பற்றி சொன்னாலும் அதற்குப் புரியாது" என்று சிரித்துக் கொண்டே கூறினார். கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    இது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.

    ஏன் என்றால் அவர்களுக்கு சொன்னாலும் புரியாது . நாம் என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப அவர்கள் சொன்னதையே சொல்வார்கள். அதை சிரித்துக் கொண்டே கடந்து போங்கள். இது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.

    உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள். நீங்கள் செயல் வீரராக இருங்கள். அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள். எத்தனையோ பிரச்னைகள் நீங்கும்.

    -ஆர்.எஸ். மனோகரன்

    Next Story
    ×