என் மலர்tooltip icon

    கதம்பம்

    தீபாவளி மருந்து
    X

    தீபாவளி மருந்து

    • பலருக்கு புதிதாக சர்க்கரை நோயில் தொடங்கி கொலஸ்ட்ரால் உள்ளிட்ட வேறு சில வியாதிகளும் வரலாம்.
    • வாய்வுக்கோளாறுகள் இருந்தால் வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிடுங்கள்.

    தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வரிசைகட்டி நிற்கும். புத்தாடை உடுத்திக்கொண்டு கவனமாக பட்டாசு கொளுத்துங்கள். நீங்களோ, குழந்தைகளோ வெடி வெடிக்கும்போது உங்களையும், மற்றவர்களையும் பாதிக்காதவாறு இருப்பது நல்லது.

    மற்றபடி, எண்ணெய்ப்பலகாரங்கள், அசைவ உணவு சாப்பிடுவதால் சிலருக்கு ஜீரணக்கோளாறு ஏற்பட்டு வயிறு வலியில் தொடங்கி வயிறு வீக்கம், ஏப்பம், மலச்சிக்கல், மூச்சுத்திணறல் மட்டுமல்ல... பலருக்கு புதிதாக சர்க்கரை நோயில் தொடங்கி கொலஸ்ட்ரால் உள்ளிட்ட வேறு சில வியாதிகளும் வரலாம்.


    சுக்கு காபி

    ஆகவே, உண்ட உணவு ஜீரணமாக முன்னெச்சரிக்கையாக ஓமத்தை வறுத்து பனைவெல்லம் கலந்து சாப்பிடுங்கள். காலை வேளையில் இஞ்சி டீ, துளசி டீ...மதிய வேளையில் புதினா ஜூஸ்... மாலை வேளையில் சுக்கு, மிளகு, கொத்தமல்லி (தனியா), ஏலக்காய் கலவையிலான சுக்கு காபி போட்டு குடியுங்கள்.

    வாய்வுக்கோளாறுகள் இருந்தால் வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிடுங்கள். எனக்கொன்றும் பிரச்சினையில்லை என்று சொல்லாமல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உங்கள் உடல்நலனையும் காத்துக்கொள்ளுங்கள்.

    -மரிய பெல்சின்

    Next Story
    ×