என் மலர்tooltip icon

    கதம்பம்

    அதிக விடுமுறை கொண்ட நாடு
    X

    அதிக விடுமுறை கொண்ட நாடு

    • மாநில அரசுகளின் விடுமுறைகள் தனி.
    • மாநிலங்கள் எல்லாம் வேற இருக்கா என டென்சன் ஆகவேண்டாம்.

    வேலை செய்து, செய்து அலுப்பாகா இருக்கா?

    நேபாளத்துக்கு கிளம்பிவிடுங்கள். உலகிலேயே அதிக விடுமுறை நாட்கள் கொண்ட நாடு என்ற "பெருமையை" பெற்ற நாடு நேபாளம்.

    52 ஞாயிற்றுக்கிழமைகள், 43 விடுமுறை நாட்கள் என ஆண்டுக்கு 95 நாட்கள், அதாவது ஆண்டுக்கு மூன்று மாதம் விடுமுறையிலேயே கழிக்கும் நாடு நேபாளம்.

    "இத்தனை நாட்கள் விடுமுறை தேவையா" என யோசிக்க நேபாள பிரதமர் ஒரு கமிட்டியை போட்டார். கமிட்டி "விடுமுறை நாட்களை குறைக்கவேண்டும்" என தீர்மானம் போட்ட கையுடன் புதியதாக பங்குனி 1 அன்றையும் விடுமுறையாக அறிவித்தார் பிரதமர்.

    இது மத்திய அரசின் விடுமுறை. மாநில அரசுகளின் விடுமுறைகள் தனி. நேபாளமே மாநில சைஸில் தான் இருக்கும். அதில் மாநிலங்கள் எல்லாம் வேற இருக்கா என டென்சன் ஆகவேண்டாம். ஏழு மாநிலங்கள் இருக்கு, மாவட்டங்கள் இருக்கு. அவர்கள் நினைத்த போதெல்லாம் விடுமுறை விடுவார்கள். ஒரு மாநில முதல்வர் சமீபத்தில் தன் மைத்துனர் இறந்ததுக்கு விடுமுறை விட்டு எல்லாம் சாதனை படைத்தார்.

    - நியாண்டர் செல்வன்

    Next Story
    ×