என் மலர்
கதம்பம்

பாரதியின் வாழ்க்கை
- பாரதி கவிதை எழுதவில்லை. இதனைத் தனது இருண்ட காலம் என்று குறிப்பிட்டு வருந்தி எழுதுகிறார்.
- புதுச்சேரியில் 10 ஆண்டுகள்தான் வாழ்கிறார். இந்த 10 ஆண்டுதான் பாரதியின் சாதனை.
பாரதியின் மொத்த வாழ்க்கை 39 ஆண்டுகள். 5 வயதில் தாயையும் 14 வயதில் தந்தையையும் இழக்கிறார். வறுமை. 11 வயதிலேயே புலமை. பாரதி பட்டம். 4 ஆண்டுகள் காசியில் வாழ்க்கை. இங்குதான் கிராப்பும், மீசையும் வைக்கிறார். இந்தியும், சம்ஸ்கிருதமும் படிக்கிறார்.
வறுமைக் கொடுமையால் எட்டையபுரம் ஜமீனிடம் வேலைக்குச் செல்கிறார். இந்த 6 ஆண்டுகள் (1898-ஆம் ஆண்டு முதல் ஜூலை 1902 வரை ) பாரதி கவிதை எழுதவில்லை. இதனைத் தனது இருண்ட காலம் என்று குறிப்பிட்டு வருந்தி எழுதுகிறார்.
24 வயதில் எட்டையபுரம் ஜமீனிடமிருந்து வெளியேறுகிறார். பிறகு மதுரையில் ஆசிரியப்பணி. 26 வயதில் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரியில் 10 ஆண்டுகள்தான் வாழ்கிறார். இந்த 10 ஆண்டுதான் பாரதியின் சாதனை.
6 ஆண்டுகள் கவிதை எழுதாத காலத்தைத்தான் பன்றி வாழ்க்கை வாழ்ந்த காலம் என்று சுயவிமர்சனம் செய்து கொள்ளுகிறார்.
-இந்திரன்






