search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அழகின் ரகசியம்!
    X

    அழகின் ரகசியம்!

    • ஒவ்வொரு மாநிலத்திற்கென்று ஒரு உணவு பழக்க வழக்கம் உண்டு.
    • தென்னை மரங்கள்தான் கேரளாவின் அழகு ரகசியமே.

    இயற்கையான வனப்புடன் திகழும் கேரள பெண்களின் அழகு ரகசியம் இதுதான்..

    ஒவ்வொரு மாநிலத்திற்கென்று ஒரு உணவு பழக்க வழக்கம் உண்டு. கேரளாவில் பிரபலமானது அதன் மிகப் பெரிய அரிசிகள் கொண்ட சாதம் தான். அதில்தான் சாதாரண அரிசியை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. நிறம் மாற்றி பாலிஷ் செய்யப்படாத கேரளா அரிசியை மாதத்தில் சில நாட்கள் எடுத்துக் கொள்வது உங்கள் அழகை மேலும் கூட்டும்.

    பால்: அடுத்து கேரள பெண்களின் உடல் வனப்பிற்கு பெரிதும் உதவுவது பால்தான். முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து அவைகளை மூடி விடும் குணம் பாலிற்கு உள்ளது. மேலும் முகத்தின் நிறம் மங்காமல் காக்கும்.

    முல்தானி மெட்டி: கேரளாவில் தூய்மையான கிடைக்கும் சந்தனத்தை முல்தானி மெட்டியோடு கலந்து பசை போலாக்கி முகத்தில் தடவி காய விடுவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி நிறம் மேலும் கூடும். மேலும் கரும்புள்ளிகள் வராமல் முகம் பளிங்கு போல மின்னும்.

    முகத்தில் உதடுகளின் மேல் மெல்லிய முடிகள் மற்றும் தாடையின் கீழ் மெல்லிய முடிகள் சில பெண்களுக்கு இருப்பது சகஜம்தான். நல்லெண்ணை, கோதுமை மாவு மற்றும் மஞ்சள் பொடியை பயன்படுத்தி அவர்கள் தங்கள் முகத்தை கழுவுகையில் தேவையற்ற ரோமங்கள் தானாகவே விழுந்து விடுகிறது.

    தேங்காய்: குளிக்கும் முன்பு வெயில் படும் இடமெல்லாம் தேங்காய் எண்ணெய் தடவி பின்னர் கடலைமாவு அல்லது பாசிப்பயிறு மாவு போட்டு குளிப்பதால்தான் இவர்கள் தேகம் மின்னுகிறது.

    கேரளாவெங்கும் அதிகமாக காணப்படும் தென்னை மரங்கள்தான் கேரளாவின் அழகு ரகசியமே... அதில் இருந்து வரும் தேங்காயை பால் எடுத்து அதனை தலை மற்றும் உடல் முழுதும் தடவுகின்றனர். அதன் பின்னர் குளிக்கின்றனர். இதனால் தேங்காயின் சத்துக்கள் அனைத்தும் சருமத்திற்கு போகிறது.

    -பராஞ்சி சங்கர்

    Next Story
    ×