search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    இப்படி கற்றுக்கொடுங்கள்!
    X

    இப்படி கற்றுக்கொடுங்கள்!

    • தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
    • சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

    ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. ஆனால் வகுப்பு ஆசிரியருக்கு வேண்டுகோள் விடுத்து அவர் ஓர் கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டுள்ள சிலவற்றை பார்ப்போம்..

    தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

    வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

    மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

    குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

    அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

    இப்படி போகிறது அந்த கடிதம்..

    இதை எழுதிய தந்தை யார் தெரியுமா..

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் தான்!

    Next Story
    ×