என் மலர்tooltip icon

    கதம்பம்

    முக்தி தரும் ஜோதிர்லிங்க தரிசனம்!
    X

    முக்தி தரும் ஜோதிர்லிங்க தரிசனம்!

    • நாகேஸ்வரர் கோவில், துவாரகை, குஜராத்.
    • இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்கள்.

    இந்தியாவில் மொத்தம் பன்னிரெண்டு ஜோதிர்லிங்க கோவில்கள் உள்ளதை நாம் அறிவோம். ஒன்றில் மற்றது எவ்விதத்திலும உயர்த்தி என்று சொல்லி விட முடியாது. அத்தனையும் நேர்த்தியான மிகச் சிறப்பான கோவில்கள். அத்தனையும் சுயம்பு லிங்கங்கள்.

    இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் :

    1.சோம்நாத், பிரபாச பட்டணம், கிர் சோம்நாத் மாவட்டம், குஜராத்.

    2.ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவில், ஸ்ரீசைலம், ஆந்திரப் பிரதேசம்.

    3.மகாகாலேஸ்வரர் கோவில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்.

    4.ஓங்காரேஸ்வரர் கோவில், மத்தியப் பிரதேசம்.

    5.கேதார்நாத் கோவில், உத்தராகண்டம்.

    6.பீமாசங்கர் கோவில், சகாயத்திரி, மகாராஷ்டிரா.

    7.காசி விஸ்வநாதர் கோவில், வாரணாசி, உத்தரப் பிரதேசம்.

    8.திரிம்பகேஸ்வரர் கோவில், நாசிக், மகாராஷ்டிரா.

    9.வைத்தியநாதர் கோவில், தேவ்கர், ஜார்க்கண்ட்.

    10.நாகேஸ்வரர் கோவில், துவாரகை, குஜராத்.

    11.இராமேஸ்வரம், தமிழ்நாடு.

    12. கிரிஸ்னேஸ்வரர் கோவில், ஔரங்கபாத், மகாராஷ்டிரா.

    இவ்வரிசையில் எண் 1 , 11 இல் உள்ள இரண்டு கோவில்களும கடற்கரையில் உள்ளது. கேதார்நாத இமயமலையிலும் பிற அனைத்தும் வட இந்தியாவில் இருக்கின்றது.

    கோவிலின் விஸ்தீரணத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் நிலையில் நம் தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரம் திருக்கோவில் அளவு பெரிது 12 கோவில்களில் வேறு எந்த திருக்கோவில் பரப்பளவும் இல்லை.

    இராமேஸ்வரம் கோவில் தரிசனம் பெறுவதற்கு வட இந்தியாவில் இருந்து பக்தர்கள் வெள்ளமாய் வருகிறார்கள். நமக்குத்தான் நமது திருக்கோவில்களின் அருமை தெரிவதில்லை.

    இராமேஸ்வரம் - காசி - இராமேஸ்வரம் இப்படியாக ஒரு முழுச் சுற்று தரிசனம் முடிந்தால் பிறவி அறும் என்பார்கள்.

    -கி.காமராஜ்.

    Next Story
    ×