என் மலர்tooltip icon

    கதம்பம்

    உடற்பயிற்சி உதவுமா?
    X

    உடற்பயிற்சி உதவுமா?

    • விருப்பத்துடன் ஈடுபடும் செயல்கள் உடலுக்கும் மனதிற்கும் வலிமையை தரும்.
    • உபகரணங்கள் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வதெல்லாம் மனதை ஏமாற்றும் வேலைதான்.

    எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே உடற்பயிற்சி செய்வது ஓட்ட பயிற்சி செய்வதெல்லாம் உடலை வலுவிழக்க செய்யும். உடலும் மனமும் ஒருங்கிணைத்து செய்யகூடிய உடல் உழைப்பே மனிதனுக்கு ஆரோக்கியத்தை தரும்.

    தெரிந்த நபரை சந்திக்க நீண்ட தூரம் ஆவலுடன் நடந்து செல்வது, விவசாய வேலை செய்து தோட்டத்தை செழுமை படுத்துவது, ஒரு பொருளை இடமாற்றுவதற்காக அதிக எடையை தூக்கி பயில்வது இவை எல்லாமே மனம் அந்த செயலில் விருப்பத்துடன் ஈடுபடும். விருப்பத்துடன் ஈடுபடும் செயல்கள் உடலுக்கும் மனதிற்கும் வலிமையை தரும்.

    ஒட்டபயிற்சி என்ற பெயரில் தினமும் காலையில் வெறுமனே ஓடுவது. இதுக்கூட பரவாயில்லை, கொஞ்சம் பலன் கொடுக்கும். ஆனால் ஹெட்போனில் பாடல் கேட்டுகொண்டு ஒடுவது, ஹெட்போன் போட்டும் போடாமலும் டிரெட்மில்லில் ஓடுவதெல்லாம் மனதையும் உடலையும் ஒருங்கிணைக்க செய்யாமல் மனசிதறல் நோய் ஏற்படும். உடல் வலிமை இழக்கும். உபகரணங்கள் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வதெல்லாம் மனதை ஏமாற்றும் வேலைதான். நோய்தான் மிஞ்சும். உடலுக்கு ஆரோக்கியம் தராது..

    காட்டுவேலை அல்லது வீட்டு தோட்ட வேலை செய்யுங்கள். எப்பொதெல்லாம் மன கவலை அதிகம் ஆகிறதோ அப்போதெல்லாம் மண்ணை கிளறி மரம் செடி நடுங்கள். வாய்ப்பு இருந்தால் நீச்சல் அடியுங்கள். சர்க்கரை நோய் போன்ற தீராத பல நோய்களுக்கு நீச்சல் பழகுவது நல்ல பலனை தருகிறது..

    -ரியாஸ்

    Next Story
    ×