என் மலர்
கதம்பம்

அப்புறம் பாருங்கள்..!
- முதலில் உங்களை நீங்களே உளமார வாழ்த்தி கொள்ளுங்கள்.
- இன்றும் இந்த நாளில் நான் மேன்மை அடையக்கூடிய நிகழ்வுகளையே எதிர்கொள்ள போகிறேன்.
உங்கள் வாழ்வு வளமாக நலமாக ஓர்சூட்சமம் இருக்கு ...
அது எதையும் எப்போதும் வாழ்த்துவது தான் !
ஓர் செடியை பார்த்தால் அது செழித்து வளர வேண்டும் என்று வாழ்த்துகள் ..
ஓர் சிற்றுயிரை கண்டால் அதற்கு தேவையான அனைத்தும் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகள் ..
ஓர் நோயாளியை கண்டால் சீக்கிரம் பூரண குணமடைய வாழ்த்துகள் ..
பள்ளி செல்லும் குழந்தைகளை கண்டால் நன்று படித்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று வாழ்த்துகள் ..
சிறு வியாபாரிகளை கண்டால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகள்..
பெரிய தனவந்தர்களை கண்டால் பலருக்கும் உதவ வேண்டும் என்று வாழ்த்துகள் ..
ஏமாற்றுபவர்களை கண்டால் அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று வாழ்த்துகள் ..
அரசியல்வாதிகளை கண்டால் அவர்கள் பொய் கடந்து மெய்யாய் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்றே வாழ்த்துகள் ..
உங்கள் சக உறவுகளை கண்டால் மேன்மேலும் முன்னேறட்டும் என்றே வாழ்த்துகள...
உங்கள் நட்புகளை கண்டால் சிறப்புற வாழவேண்டும் என்றே வாழ்த்துகள்..
அந்த வாழ்த்தும், உங்களை உள்ளும் புறமுமாய் வாழ்விக்கும் இறையை முன்னிறுத்தி வாழ்த்துகள் ..
வாழ்த்த வயது இல்லை என்று பொய் சொல்லாதீர்கள் ! நம் பிறப்பின் மறு சுழற்சியில் அவர்களோடு வயதில் ஒத்தவர்கள் தான் என்று மெய்யை உணர்ந்து வாழ்த்துகள்..
நீங்கள் வாழ்த்துவது வார்த்தையாக உங்கள் வாய் வழியே வந்து அதை வாழ்த்து பெறுபவர் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. மனதில் நினைத்தாலே போதும்!
முதலில் உங்களை நீங்களே உளமார வாழ்த்தி கொள்ளுங்கள். "நான் நலமாய், வளமாய் இருக்கிறேன்.. . என்னோடு உட்கலந்து இருக்கும் இறைவனின் பரிபூரண ஆசி என்றும் என்னிடம் உள்ளது. அது என்னை மென்மேலும் சிறப்புற வளமுற நலமுற வாழ்வித்து கொண்டே இருக்கும். இன்றும் இந்த நாளில் நான் மேன்மை அடையக்கூடிய நிகழ்வுகளையே எதிர்கொள்ள போகிறேன் ! " என்று காலை எழுந்தவுடன் முதல் வாழ்த்து உங்களிடமிருந்து தொடங்கட்டும்.
அது பார்ப்பது.. கேட்பது.. உணர்வது.. போன்ற அனைத்திற்கும் உங்கள் உள்ளத்தின் குரலாக பரவட்டும்.
எதை கொடுத்தாலும் வாழ்த்தி கொடுங்கள் !
எதை பெற்றாலும் வாழ்த்தியே பெறுங்கள் !!
எதை நினைத்தாலும் வாழ்த்தியே நினையுங்கள்!
அப்புறம் பாருங்கள் .. உங்கள் வாழ்வே மிகப்பெரிய, வெளியே சொல்லி விவரிக்க முடியாத ஆனந்த உணர்வில் திழைக்கும்!
எது நடந்தாலும் அதை இறையருளாக ஏற்றுக்கொள்ளும் தன்மையும் உங்களிடம் இருந்து வெளிப்பட துவங்கும் !!
உங்கள் உடலை சுற்றி உள்ள ஒளியுடல் பிரகாசம் ஆகும்! உங்கள் முகமே ஓர் தேஜஸுடன் ஒளிவீசும் !!
உங்களை சுற்றி என்ன எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும் அது உங்களை தாக்காது, உங்களின் சுற்றத்தையே நேர்மறையாக மாற்றும் ..
எதனிடமும் அன்பே மிளிரும் ! கருணையே ஒளிரும் !!
-வான் கடந்தான்






