search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    சித்ரா பவுர்ணமி வழிபாடு
    X

    சித்ரா பவுர்ணமி வழிபாடு

    • ஆயுள் விருத்தியும், செல்வ வளத்தையும் அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.
    • சித்திர குப்தரை சிந்தையில் நிறுத்தி வழிபட வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததுதான் ஆனால் சித்திரை மாதம் வரும் பவுர்ணமி மிகச்சிறப்பு வாய்ந்தது!

    தமிழ் மாதத்தில் முதல் மாதம் சித்திரை!சூரியன் உச்சம் பெறும் மாதம் சித்திரை!!இந்த சித்தரை மாதத்தில் சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடிய திருநாளே சித்ரா பவுர்ணமி.

    மற்ற எந்த மாதங்களில் வரும் பவுர்ணமியை விட சித்ரா பவுர்ணமி அன்று சந்திரன் எந்நவித கலங்கமும் இல்லாமல் அவ்வளவு பிரகாசமாக இருப்பார்.

    இந்த சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை வழிபடுவதால் உங்கள் பாவக்கணக்குகள் குறைந்து புண்ணிய கணக்குகள் அதிகமாகும். மேலும் ஆயுள் விருத்தியும், செல்வ வளத்தையும் அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.

    சித்ரா பவுர்ணமி அன்று விரதமிருந்து வாசலில் மா கோலமிட்டு,பொங்கல் வைத்துவாழை இலை இட்டு அதில் பொங்கலோடு முக்கனிகளை பரப்பி அதனோடு எல்லா காய்கறின் கூட்டும், பால் பாயசமும் படைத்து. சித்திர குப்தரை சிந்தையில் நிறுத்தி வழிபட வேண்டும்.

    இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.

    தெரியாமல் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி அன்று கல்வி பயிலும் வசதி இல்லாத மாணவ செல்வங்களுக்கு நோட்டு, பேனா வாங்கி கொடுப்பது சிறப்பாகும்.

    ஜோதிட ரீதியாக சித்ரா பவுர்ணமி வழிபாடு மிகச்சிறந்த பரிகாரமாகும்.

    மனதுக்கு காரகன் சந்திரன்!நல்ல எண்ணம், நல்ல மனநிலை, தாயாரின் நிலை, தனம் இவற்றை அருளக்கூடியவர் சந்திரன்.

    சந்திரபகவானின் அருள் பெற சித்ரா பவுர்ணமி விரதம் கடை பிடிப்பது மிகச்சிறப்பானது. இதனால் மனமும், எண்ணமும் சிறப்படையும், பொருளாதார மேன்மை கிடைக்கும். அதே போல் தாயாரின் உடல் நலம் மேம்படும்.

    குறிப்பாக மன சஞ்சலம் கொண்டவர்கள், மன சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சித்ரா பவுர்ணமி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    அதே போல் பெண்கள் இந்த விரதத்தை கடை பிடித்தால் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றியதற்கு சமமான பலன் கிடைக்கும்.மாங்கல்ய பலம் பெறும் நாள்.

    சித்திரை நட்சத்தின் அதிபதி செவ்வாய். இந்த சித்திரை நட்சத்திரத்தில் தான் சித்ரா பௌர்ணமி அன்று சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

    செவ்வாய் தோசத்தால் பல வழிகளிலும் பாதிக்கப்படுடவர்கள் சித்ரா பவுர்ணமி விரதத்தை கடைப்பிடிப்பதால் செவ்வாய் தோசம் நீங்கும். திருமண தடை அகலும், இல்லறம் சிறந்தோங்கும், ஆயுள் அதிகரிக்கும், விபத்து கண்டங்கள் நீங்கும்.

    நவக்கிரகங்களில் கேதுவின் தேவதை சித்திர குப்தர்தான். கேதுவால் ஏற்படும் புத்திர தோசம், களத்திர தோசம், மாங்கல்ய தோசம், நாக தோசம் உள்ளிட்ட அனைத்து தோசங்களும் சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை விரதமிருந்து வழிபடுவதால் நீங்கும்.

    தடைகள் மன குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சனைகள் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். புத்திரபாக்கியம் ஏற்படும், திருமணத்தடைகள் அகலும். தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சித்திர குப்தரை வணங்குவதால் நம்முடைய அத்தனை துன்பங்களையும் நீக்கி, செல்வத்தை அள்ளிக்கொடுப்பார் சித்திர குப்தர்.

    -ஜோதிடர் சுப்பிரமணியன்.

    Next Story
    ×