search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    இலங்கையும் அரங்கமும்
    X

    இலங்கையும் அரங்கமும்

    • ஆற்று நீர் இந்த வண்டல்களோடு, கனிமங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்.
    • கடலுக்கு நடுவாப்புலே... அப்படி ‘அரங்கம்’ மாதிரி உருவாகி நின்னுச்சி’னா ... இலங்கை’னும் சொல்லுவாங்க.

    ஓடிவரும் ஆறு... கல், மண், மரம், செடி, கொடி, இறந்த உயிரினங்கள் யாவற்றையும் உருட்டிப் புரட்டி இழுத்துவரும்.

    வரும் பாதையில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் ... ஆறு இழுத்துவரும் பொருட்கள்... அந்த தடங்கலில் சிக்குண்டு தங்கி ஆற்று நீர் திசைமாறி வளைந்தோடும்.

    இப்படித் தொடர்ந்து தங்கும் பொருட்கள் யாவும் ஒன்றாகச் சேர்ந்து உருவாவதே வண்டல் மண்ணாகும்.

    ஆற்று நீர் இந்த வண்டல்களோடு, கனிமங்களையும் கொண்டுவந்து சேர்க்கும். கனிமங்கள் ஒன்று சேர்ந்து கனிமப் படிவங்களை உண்டாக்கும்.

    இவ்வாறு உண்டான வண்டல் படிவங்கள் காலப்போக்கில் படிவப் பாறைகளாக மாறும்.

    இப்படி அழகாக உருவாகி, ரம்மியமாக இருந்ததுதான் இலங்கைத் தீவு, அது ஆஆஆஆ.....ரம்பத்திலே உருவானக் கதை இதுதான்.

    ஒழுங்கா ஓடிக்கிட்டு இருக்கற ஆறு...

    நடுவிலே ... பெரிய மலையோ, மண்திட்டோ... இருக்கற இடத்தை கடந்து ஓடறப்போ...

    மத்தியிலே... அந்த தடுப்புலே மோதி ... ரெண்டா பிரிஞ்சி ஓடும்.

    அந்த ரெண்டா பிரிஞ்சி ஓடுன ஆத்துக்கு நடுவுலே... நிலம் அல்லது திட்டு அல்லது தீவு உருவாகி... அதுல மரம் செடி கொடி வளரும். அது பேரு... ஆற்றிடைக் குறை !

    இப்புடி உருவாகற நிலம் மனுஷன் வாழறதுக்கு தோதாகவும், வளமாகவும் இருக்கும்.

    அதுக்கு தமிழிலே... அரங்கம்'னு, சொல்லுவாங்க.

    அதுவே கடலுக்கு நடுவாப்புலே... அப்படி 'அரங்கம்' மாதிரி உருவாகி நின்னுச்சி'னா ... இலங்கை'னும் சொல்லுவாங்க.

    காவிரிக்கு நடுவுல இருக்கற குறையை திருவரங்கம்'னும், கடலுக்கு நடுவாப்புல இருக்கற குறையை இலங்கை'னும் ... தமிழர்கள் அழைத்தார்கள்.

    -மானெக்ஷா

    Next Story
    ×