search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பெண்ணின் பலமும் பலவீனமும்
    X

    பெண்ணின் பலமும் பலவீனமும்

    • பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.

    பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 டிகிரி கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும்.!ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது.!

    இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 டிகிரி கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும்.! அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது.!

    உங்கள் வீட்டிலும் இந்தப் பிரச்சினை சில சமயங்களில் இருக்கும்.. கணவன் வேலைக்குச் செல்ல தயாராகும் போது, 'என் பைக் சாவி எங்க.? சாக்ஸ் பாத்தியா.? ஷூவப் பாத்தியா.?'என்று மனைவியைப் போட்டு வதைப்பதும்..

    மனைவியும் "இது என்ன? கண்ணுக்கு முன்னே வச்சிக்கிட்டு தேடுறீங்க.? எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்" என திட்டிக் கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி.! இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும். ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.!

    பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பெண்களால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும். ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள்.! காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்கள் மிக துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான்.

    ஆண்கள், பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

    ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது, பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர்! சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்!

    இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான்.! மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள். ஆனால் இந்தவிஷயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள்.! கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.!

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான இந்த வித்தியாசங்களை எல்லோரும் அறிந்து கொள்வது அவசியமாகும்.!

    -ஸ்ரீராம் கோவிந்த்

    Next Story
    ×