என் மலர்tooltip icon

    கதம்பம்

    வேறு வீடு!
    X

    வேறு வீடு!

    • நவீன அறிவியல் கூட்டத்தின் கண்களுக்கு புலப்படாத, நிழல் கோள்களாக "ராகு கேது" நவகிரகங்களில் உள்ளன.
    • சூரியன் மையம் தான் என்ற அறிவியல் உண்மையை உலகிற்கு நிறுவியவர்கள் தமிழர்களே.

    நமக்கெல்லாம் தெரிந்த அளவில், கிரகம் என்றால் "வாழ்விடம்"அல்லது "வீடு" என்று பொருள். அதன் உண்மையான பொருள் "வேறு வீடு" என்பதே சரியானதாகும்.

    நாம் தங்கியிருக்கும் வீட்டை விட்டு, வேறு வீட்டிற்கு குடிபோவதை "கிரகப்பிரவேசம்" என்று அழைக்கிறோம். அதாவது வேறு வீட்டிற்கு மாறுகிறோம் என்பதை குறித்த பெயர்தான் "கிரகப்பிரவேசம்".

    எனவே கிரகம் என்றால் வேறு இடம், அதாவது மனிதர்கள் வாழும் பூமி அல்லாத "வேறு அகம்" என்பதே மருவி, வேறகம், கேரகம் பிறகு கிரகம் என்றானது.

    இதிலிருந்து என்ன தெரிகிறது. கிரகம் என்பது சூரியனை சுற்றும் கோள்களை மட்டும் குறிக்காது, அது பூமியல்லாத, ஆனால் பூமியில் வாழும் உயிரினங்களின் மீது கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வேறு அகங்களை குறிக்கிறது. இதில் துணைகோளான நிலவு, வீண்மீனான சூரியன் , ஆகியவையும் அடங்கும்.

    சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்ரன் (வெள்ளி), சனி, ராகு (நிழல்கோள்), கேது ( நிழல்கோள்) ஆகிய ஒன்பதும் வேறு அகங்கள் ஆகும்.

    மேற்கண்ட 9 வேறகத்தில் சூரியனை மட்டும் நடுவே நிறுத்தி, சூரியன் மையம் தான் என்ற அறிவியல் உண்மையை உலகிற்கு நிறுவியவர்கள் தமிழர்களே.

    மேலும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே, நேர்கோட்டில் நிலவு வந்து மறைக்கும் "சூரிய கிரகணத்தை" பாம்பின் உடல் , மனித தலை கொண்ட "ராகு" எனும் நிழல் கிரகமாகவும்,

    சூரியனுக்கும் நிலவிற்கும் நடுவே நேர்கோட்டில் பூமி வந்து மறைக்கும் "சந்திர கிரகணத்தை" பாம்பின் தலை, மனித உடல் எனும் "கேது" கிரகமாகவும் உருவகம் செய்தனர்.

    ஏனென்றால் மற்ற பௌதீக கிரகங்களை போலவே , பூமியில் வாழும் உயிரினங்களின் மீது குறிப்பிட்ட தாக்கத்தை, சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுத்துகிறது. இதனால்தான் நவீன அறிவியல் கூட்டத்தின் கண்களுக்கு புலப்படாத, நிழல் கோள்களாக "ராகு கேது" நவகிரகங்களில் உள்ளன.

    -முனைவர் பாண்டியன்

    Next Story
    ×