search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    நூல் தந்தவருக்கு ஆடை
    X

    நூல் தந்தவருக்கு ஆடை

    கி. வா. ஜ. ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப்பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு coughsyrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.

    கி.வா.ஜ. அவர்கள், 'இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள்' என்று கேட்டார்.

    பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர். பாராட்டுரை சொல்ல வந்த கி.வா.ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, 'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்' என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

    அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி.வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, 'நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்' என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.

    ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. "மாதுளங்கனி அருமை!" என்று பாராட்டினார்.

    "மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!" என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க, "மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!" என்றார் கி.வா.ஜ.

    கிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று! அவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா? ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.

    கிவாஜ , இன்னிக்கு வேணாமே! தொண்டை கம்மியிருக்கு... என்றார். அந்தப் பெண் சொன்னாள், 'பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.'

    Next Story
    ×