search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பாதியும் சரிபாதியும்!
    X

    பாதியும் சரிபாதியும்!

    • சாிபாதி என்றால் சமமான பகுதி என்று பொருள்.
    • ‘பகு’என்ற குறிலிணை ‘பா’என நீண்டு, அத்துடன் தி சோ்ந்து ‘பாதி’ ஆனது .

    பாதி வேறு; சாிபாதி வேறு .

    இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது .

    பாதி என்றால் பகுதி என்று பொருள் .

    சாிபாதி என்றால் சமமான பகுதி என்று பொருள்.

    " நீ உண்ணும் பொங்கலில் பாதி கொடு" என்றால், அது கால் பகுதியாகவும் இருக்கலாம் அல்லது முக்கால் பகுதியாகவும் இருக்கலாம் .

    " சாிபாதி கொடு" என்றால் , பிாித்த இரண்டு பகுதிகளும் சமமாக இருக்க வேண்டும் .

    இறைவன் தன் உடலில் சாிபாதியைப் பெண்ணுக்குக் கொடுத்தான் என்று சொல்ல வேண்டும். பாதியைப் பெண்ணுக்குக் கொடுத்தான் என்று சொல்வது பிழையாகும் .

    பகுதி என்ற சொல்லே பாதியானது .

    'பகு'என்ற குறிலிணை 'பா'என நீண்டு, அத்துடன் தி சோ்ந்து 'பாதி' ஆனது .

    "குறுமையும் நெடுமையும் அளபிற் கோடலின்

    தொடா்மொழி எல்லாம் நெட்டெழுத் தியல."

    என்ற தொல்காப்பிய விதி இதற்கு இடம் தருகிறது .

    தொகுப்பு -- தோப்பு

    இயலும் -- ஏலும்

    அகத்துக்கு -- ஆத்துக்கு

    என்றானதும் இவ்விதிப்படியே .

    -ஜெகதீசன்முத்துக்கிருஷ்ணன்

    Next Story
    ×