search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஜனநாயகமும்  குடியரசும்
    X

    ஜனநாயகமும் குடியரசும்

    • பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியான மக்களவை இயற்றும் சட்டங்களை அவர்கள் தம் விருப்பப்படி எதிர்த்து வாக்களிக்க இயலும்.
    • இப்ப அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு சட்ட மசோதாக்களை இரண்டு ஆண்டுகள் வரை தாமதிக்க மட்டுமே இயலும் என கூறப்பட்டுள்ளது.

    "ஜனநாயகம் என்பது இரு ஓநாய்களும், ஒரு ஆடும் டின்னருக்கு என்ன சாப்பிடலாம் என ஓட்டு போட்டு முடிவெடுப்பது" என எழுதினார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

    அதனால் அமெரிக்கா ஜனநாயக நாடாக இல்லாமல் குடியரசு நாடாக இருக்கும்படி அரசியல் சட்டம் எழுதப்பட்டது.

    "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பது ஜனநாயகம் (Democracy). ஆனால் அமெரிக்க அரசியல் சட்டம் தனிமனிதனின் அடிப்படை உரிமைகளை பெரும்பான்மை மக்களிடம் இருந்தும், அவர்களின் பிரதிநிதியான அரசிடம் இருந்தும் காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனால் அது குடியரசு (Republic)

    பிரிட்டன் ஜனநாயக நாடும் அல்ல, குடியரசும் அல்ல. அது முடியாட்சி நாடு. மக்களின் பிரதிநிதியாக பிரதமர் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை (House of commons) உள்ளது. ஆனால் பிரபுக்கள் சபை (House of Lords) என மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இன்னொரு சபையும் உள்ளது.

    பிரபுக்கள் சபை கிபி 1215ம் ஆண்டில் உருவானது. அதன் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. அதில் 26 உறுப்பினர்கள் சர்ச் ஆஃப் இங்கிலாந்தால் நியமிக்கப்படுவார்கள். 1215ல் இருந்து தலைமுறை தலைமுறையாக பிரபுக்களும், அவர்களின் வாரிசுகளும் தான் பதவிக்கு வருவார்கள். அவர்கள் எந்த கட்சிக்கும், பிரதமருக்கும் கட்டுபட்டவர்கள் கிடையாது. மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பவர்களும் கிடையாது.

    அதனால் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியான மக்களவை இயற்றும் சட்டங்களை அவர்கள் தம் விருப்பப்படி எதிர்த்து வாக்களிக்க இயலும். இப்ப அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு சட்ட மசோதாக்களை இரண்டு ஆண்டுகள் வரை தாமதிக்க மட்டுமே இயலும் என கூறபட்டுள்ளது.

    முழுக்க பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்த சபை என்பதால் பெண்கள் அதில் உறுப்பினர் ஆக 1958 வரை அனுமதி இல்லை. மிக, மிக தன்மையாக நடக்கும் சபை. மக்களவை மாதிரி கூச்சல், குழப்பம், கலாட்டா எதுவும் இருக்காது. யாராவது பிரபு இறந்தால் அவருக்கு பதிலாக இன்னொரு பிரபுவை நியமிக்க தேர்தல் எதுவும் நடக்காது. "நான் ஏன் பிரபுக்கள் சபையில் சேர தகுதியானவன்?" என பிரபுக்கள் கவிதை, கட்டுரை என எழுதுவார்கள். அதை வைத்து ஒரு பிரபு தேர்ந்தெடுக்கப்படுவார்.

    ஆக ஜனநாயகம் என்பது மக்களின் சர்வாதிகாரமாக மாறாமல் தடுக்கும் மெக்கானிசம் உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது வியப்பான விசயம் தான்.

    - நியாண்டர் செல்வன்

    Next Story
    ×