search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பாய்காட்டும் புறக்கணிப்பும்!
    X

    பாய்காட்டும் புறக்கணிப்பும்!

    • நிலக்கிழாரின் நிலங்களுக்கான வாடகை தண்டும் முகவராக பணியாற்றினார்.
    • ஆங்கிலத்தில் சில சொற்களை ஆய்வு செய்தால் இது போன்ற வேடிக்கையான வரலாற்றுச் செய்திகள் புதைந்து கிடப்பதை அறியலாம்.

    ஆங்கிலத்தில் சில சொற்களை ஆய்வு செய்தால் இது போன்ற வேடிக்கையான வரலாற்றுச் செய்திகள் புதைந்து கிடப்பதை அறியலாம்.

    தமிழர்கள், நற்றமிழ்ச் சொற்களைப் புறக்கணிக்காதீர்கள்… நமக்குப் பாய்காட் வேண்டாம்.

    ஆங்கிலத்தில் ஆளப்பெறும் பாய்காட் boycott எனுஞ்சொல் ஆட்பெயரால் அமைந்த சிறப்புப் பெயராகும். புறக்கணிப்பு எனும் பொருளில் இச்சொல் ஆங்கிலத்தில் ஆளப்பெறுவது வியப்பே.

    சால்சு கன்னிங்காம் பாய்காட் எனும் பிரிட்டிசு படைப்பிரிவு பொறுப்பாளர் பணி ஓய்வு பெற்ற பின் அயர்ந்லாந்தில் லோர்ட்டு ஏர்ன் எனும் நிலக்கிழாரின் நிலங்களுக்கான வாடகை தண்டும் முகவராக பணியாற்றினார்.

    வாடகை எண்ணிப் பார்க்க முடியாதவாறு உயர்வாக இருந்தமையால் நிலத்தை வாடகைக்குப் பெற்றவர்கள் எதிர்க்கத் தொடங்கினர். பாய்காட், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் விரட்டியடிக்கவும் பணிக்கப்பட்டார்.

    அவருடைய கடும்போக்கினால் வெறுப்படைந்த வாடகையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பாய்காட்டைப் புறக்கணிக்கத் தொடங்கினர்.

    மக்களின் பேரெழுச்சியைப் பாய்காட்டால் தாங்க முடியவில்லை. இதனால் அவர் தம் மனைவி ஏனியுடனும் படை அதிகாரிகள் சிலரின் பாதுகாப்புடனும் ஒரு மருத்துவ ஊர்தியின் வாயிலாக ஊரை விட்டே ஓடி தப்பிச் சென்றார்.

    அன்றிலிருந்து .. புறக்கணிப்பு எனும் பொருளில் பாய்காட் எனுஞ் சொல் ஆங்கிலத்தில் கையாளப்பட்டு வருகின்றது.

    ஆங்கிலத்தில் சில சொற்களை ஆய்வு செய்தால் இது போன்ற வேடிக்கையான வரலாற்றுச் செய்திகள் புதைந்து கிடப்பதை அறியலாம்.

    தமிழில் நாம் புறக்கணிப்பு எனும் சொல்லை மிகவும் பொருந்திய வேரியல், பொருள் நுட்பம், முதலிய மொழியியல் அடிப்படையில் பயன்படுத்துவது தமிழின் மேன்மையை வெளிப்படுத்துகின்றது எனில் மிகையாது. எனவே தமிழர்கள், நற்றமிழ்ச் சொற்களைப் புறக்கணிக்காதீர்கள்… நமக்குப் பாய்காட் வேண்டாம்.

    -இரா. திருமாவளவன்

    Next Story
    ×