என் மலர்
கதம்பம்

மழை பொழிந்து கொண்டே இருக்கும்....
- இந்தியப் பெருங்கடலிலிருந்து ஈரப்பதத்தை சுமந்து செல்லும் காற்று இமயத்தின் தென் சரிவுகளில் மோதுகையில் அவை மேலெழும்ப வேண்டிய கட்டாயத்திற்கு வருகின்றன.
- பாரம் தாங்க முடியாமல் தங்களுடைய சுமையை அடைமழை வடிவில் கீழே இறக்குகின்றன.
சிரபுஞ்சியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமம் தான் மவுசின்ராம் (Mawsynram) இங்கு ஒரே ஆண்டில் 2,540 செண்டிமீட்டர் மழை பொழிந்தது ஒரு உலக சாதனை ஆகும். பொதுவாக இந்தியாவின் ஒரு ஆண்டில் பெய்யும் மொத்த மழையில் 75% ஜூன்- செப்டம்பரிலே இங்கு பெய்து விடுகிறது.
அங்கு மட்டும் எப்படி இவ்ளோ மழை?
கடலில் மிக வெப்பமான பகுதிகளிலுள்ள பெருமளவான தண்ணீரை சூரியன் ஆவியாக்கும்போதுதான் வெப்பமண்டல பிரதேசங்களில் பெருமழை பெய்கிறது. இந்தியப் பெருங்கடலிலிருந்து ஈரப்பதத்தை சுமந்து செல்லும் காற்று இமயத்தின் தென் சரிவுகளில் மோதுகையில் அவை மேலெழும்ப வேண்டிய கட்டாயத்திற்கு வருகின்றன; அப்போது அவை பாரம் தாங்க முடியாமல் தங்களுடைய சுமையை அடைமழை வடிவில் கீழே இறக்குகின்றன. இதில் பெரும்பாலானவற்றை மேகாலயா பீடபூமியே பெற்றுக்கொள்கிறது. மேலும், பகல்பொழுதில் வெப்பமண்டல சூரியனின் முழு சக்தியை இந்த மேடான பகுதி வாங்கிக்கொள்வதால், மாலையில் காற்று குளிர்ச்சியடையும் வரை மழை மேகங்கள் மேலே உயர்ந்து இந்தப் பீடபூமியின் மேல் வட்டமிடுகின்றன. இரவில் கனமழை கொட்டி தீர்த்துவிடுகிறது.
ஆனால் இந்த மழையால் நமக்கு பயனதிகமில்லை. சிரபுஞ்சியை சுற்றிலுமுள்ள காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டதாலும் நீர்த்தேக்கங்களை கட்டாததாலும் பெருமளவான மழை நீர் இந்த உயர்ந்த பீடபூமியிலிருந்து கீழே வடிந்து சமவெளிகளிலுள்ள ஆறுகளை நிரப்புகிறது, இந்த ஆறுகள் பெரும்பாலும் வங்காள தேசத்திற்குள் ஓடிவிடுகின்றன.
-அருண் நாகலிங்கம்






