என் மலர்tooltip icon

    கதம்பம்

    முதல் கடல் பாலம்
    X

    முதல் கடல் பாலம்

    • தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டனர்.
    • 1911 ஆகத்து மாதத்தில் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 அன்று பாலம் திறக்கப்பட்டது.

    ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்துக்கு வயது 109.. இந்தியாவின் முதல் கடல் பாலம் இது..

    இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமும் இதுதான். (இதன் நீளம் 2.3 கி.மீ.)

    1876 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்தை மேம்படுத்த ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

    தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டனர்.

    அதற்காக ஜெனரல் மன்றோ என்பவர் தலைமையில் ஒரு கள ஆய்வு நடத்தப்பட்டது. பாலம் அமைப்பது சாத்தியம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டு இத்திட்டம் ஆய்வு நிலையில் கைவிடப்பட்டது.

    பின்னர் சென்னை டெபுடி ஜெனரல் ரைட்சன் என்பவரால் 'டுவின் பெட் பெர்க்கிலி ரயில் சர்வீஸ்' என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது.

    அதற்கு 2 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் இது மீண்டும் கைவிடப்பட்டது.

    இறுதியாக கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 ல் 'டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ்' பாலம் கட்டுவதற்கு 1899 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    1911 ஆகத்து மாதத்தில் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 அன்று பாலம் திறக்கப்பட்டது.

    -சுந்தரம்

    Next Story
    ×