என் மலர்
கதம்பம்

தமிழ் படித்தால் தான் வேலை
- தமிழ் மொழி என்பது இந்திய மொழிகளில் மிக முக்கியமான மொழி.
- இரண்டு மிகக்கடினமான தமிழ்த்தேர்வு எழுதி தேர்வு பெறுவது அவசியமாக்கப்பட்டது.
தரங்கம் பாடியில் கிருத்துவம் பரப்ப, சீகன் பால்க் உடன் அனுப்பப்பட்ட மிசினரிகளில் ஒருவரான ஜே .இ .கிரண்ட்லேர் என்பவர் 15/1/1715 இல் எழுதிய அவரது கடிதத்தில்,
அந்தப்பகுதியில் பேசப்பட்ட "தமிழ் மொழி என்பது இந்திய மொழிகளில் (திராவிட என்றுதான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்) மிக முக்கியமான மொழி. அது மிகச் சிறந்த நூல்கள் அதிகம் கொண்டது. அதை ஐரோப்பாவில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழகத்திலும் பயிற்றுவிக்க மிகத்தகுதியானது. அது அவசியமும் கூட என்று வலியுறுத்துகிறார்.
இதை ஏற்று 17 ஆம் நூற்றாண்டிலேயே இங்கு அனுப்பப்படும் மிஷினரிகள் இடையில்மொழி பெயர்ப்பாளர் யாரும் இல்லாது தமிழ் மக்களுடன் நேரடியாக பேசும் வகையில் தமிழ் கற்பித்த பின்பே தரங்கம்பாடி அனுப்பப்பட்டனர்
அப்போது தரங்கம்பாடி அனுப்பப்படுவதற்கு முன் அவர்கள் இரண்டு மிகக்கடினமான தமிழ்த்தேர்வு எழுதி தேர்வு பெறுவது அவசியமாக்கப்பட்டது . இத்தகைய சிறப்பு அப்போது வேறு எந்த இந்திய மொழிகளுக்கும் கிடைக்கவில்லை.
இவர்கள் இத்தனை ஆர்வமாக தமிழ் கற்று தரங்கம்பாடி வந்தததற்குக் காரணம் அவர்களது மதத்தைப் பரப்பவதற்கு மட்டுமில்லாது, இங்கே பண்டைய தமிழ் மருத்துவர்களிடம் கிடைத்த மருத்துவ அனுபவங்களையும் பெறவும், பண்டைய ஓலைச் சுவடிகளை சிறிய விலைக்கொடுத்து சேர்த்து ஜெர்மனி கொண்டு சேர்ப்பதற்காகவே என்று தமிழ் ஜெர்மன் ஆய்வாளர்கள்குறிப்பிட்டுள்ளனர்
இத்தனை பெருமைகளையும் மருத்துவ சிறப்புகளையும் நாம் இழந்த பின்பும் இன்னமும் இருப்பதைப் பாதுகாக்கவும் போற்றவும் ஆர்வம் காட்டாது இருக்கின்றோம்.
-அண்ணாமலை சுகுமாரன்






