என் மலர்tooltip icon

    கதம்பம்

    நான் சொல்றது சரிதானே...
    X

    நான் சொல்றது சரிதானே...

    • முதல்வர் காமராஜருக்கு தன் ஜெயில் அனுபவங்களை ஞாபகப்படுத்தி திருமண அழைப்பிதழ் அனுப்பி வைக்கிறார்.
    • திடீரென்று சொல்லாமல் வந்து விட்டீர்களே நான் ஒன்றும் சிறப்பாக செய்யவில்லை மன்னிக்கவும்.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தன்னுடைய கட்சிக்காரர்களுடன்ஜெயிலில் இருக்கிறார். அப்புறம் தண்டனை முடிந்து அனைவரும் ஜெயில்ல விட்டு வெளியே வருகிறார்கள். காமராஜர் முதல்வராகி விடுகிறார். அவருடன் ஜெயிலில் தண்டனை அனுபவித்த ஒருவரின் மகள் திருமணம். முதல்வர் காமராஜருக்கு தன் ஜெயில் அனுபவங்களை ஞாபகப்படுத்தி திருமண அழைப்பிதழ் அனுப்பி வைக்கிறார்.

    காலையில் தாலி கட்டு. முதல்வர் காமராஜர் திருமண மண்டபத்திற்கே வந்து விடுகிறார்.அனைவருக்கும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும். பெண்ணின் அப்பாவுக்கு ஆச்சரியம். முதல்வர் வரமாட்டார். கடமைக்கு அழைப்பிதழ் அனுப்புவோம் என்று அனுப்பியதுதான்.

    "ஐயா தாங்கள் வருவீர்கள் என நான் நினைக்க வில்லை. திடீரென்று சொல்லாமல் வந்து விட்டீர்களே நான் ஒன்றும் சிறப்பாக செய்யவில்லை மன்னிக்கவும்"

    "நான் வர்ரேனு சொல்லியிருந்தா நீ என்ன செஞ்சிருப்பே.. முதலமைச்சர் வர்ரார்னு பெரிய மண்டபத்தை பிடிச்சிருப்பே, அப்புறம் என்னோட கட்சிக்காரங்க ஐம்பது நூறு பேர் வருவான், எனக்கு பாதுகாப்புக்குனு நூறு போலீஸ்காரங்க வருவான்.. எல்லாருமா சேர்ந்து சாப்பிட்டுட்டு போயிருவான். ஆக நீ கடனாளியாகிப் போவே... நான் சொல்றது சரிதானான்னேன்" என்றார்.

    என்ன ஒரு எளிமை. எவ்வளவு கரிசனம். அவர் தான் பெருந்தலைவர்.

    -எழுத்தாளர் சோ. தர்மன்

    Next Story
    ×