என் மலர்tooltip icon

    உண்மை எது

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒமிக்ரான் பற்றி வலைதளங்களில் வைரலாகும் பகீர் தகவல்

    கொரோனாவைரஸ் தொற்றின் புதிய ஒமிக்ரான் வேரியண்ட் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    கொரோனாவைரஸ் தொற்றின் புது வேரியண்ட் ஒமிக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. நவம்பர் 24 ஆம் தேதி கண்டறியப்பட்ட ஒமிக்ரான் ஏற்கனவே உலகின் சில நாடுகளில் பரவி விட்டது. கொரோனா வைரசின் புது வேரியண்ட் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முழுவீச்சில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த நிலையில், ஒமிக்ரான் வேரியண்ட் பாதிப்பு தற்போது நடைமுறையில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளில் கண்டறிய முடியாது என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்துடன் ஒமிக்ரான் பற்றி நெடிய விவரங்களும் வைரல் பதிவுகளில் இடம்பெற்று இருக்கிறது.

     கோப்புப்படம்

    வைரல் தகவல் பற்றிய இணைய தேடல்களில், 'ஒமிக்ரான் வேரியண்ட் பாதிப்பு மிகத்தீவிரமாக இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது. எனினும், இது எந்தளவு தீவிரமாக இருக்கும், எவ்வளவு வேகமாக மற்றவர்களுக்கு பரவும், எப்படி இதனை கண்டறிவது என்பது பற்றியோ எந்த தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை,' என தெரியவந்துள்ளது. 

    மேலும் ஒமிக்ரான் பாதிப்பு அடைந்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றும், இந்த பாதிப்பை கண்டறிய இதுவரை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளே நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×