search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் பறக்கும் படை சோதனை- பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடம்
    X

    தேர்தல் பறக்கும் படை சோதனை- பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடம்

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், தமிழகத்தில் அதிக அளவிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019 #ElectionFlyingSquad #CashSeizure
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் தங்கம், பரிசுப்பொருட்கள், சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் 24-ம் தேதி வரை நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ.3152.54 கோடி ஆகும்.

    அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.214.95 கோடி பணம், ரூ.708.69 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3.54 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.38 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.8.13 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ஆந்திராவில் ரூ.137.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ரூ.48.68 கோடி, உத்தர பிரதேசத்தில் ரூ.40.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் ரூ.524.34 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத் கடற்கரையில் மட்டும் ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019 #ElectionFlyingSquad #CashSeizure
    Next Story
    ×