search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று மாலை 6 மணிக்கு பின் அரசியல் தலைவர்கள் பேட்டி கொடுக்க தடை- தேர்தல் கமி‌ஷன் உத்தரவு
    X

    இன்று மாலை 6 மணிக்கு பின் அரசியல் தலைவர்கள் பேட்டி கொடுக்க தடை- தேர்தல் கமி‌ஷன் உத்தரவு

    வி.ஐ.பி. நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இன்று மாலை 6 மணிக்கு பிறகு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்க தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது. #Loksabhaelections2019 #ElectionCommission
    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கு ஆதரவாக கடந்த 1 மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தனர். தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் விதியின்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். 18-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

    எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு அதாவது இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் முடிகிறது.

    இதன் பிறகு அரசியல்வாதிகள் யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமி‌ஷன் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அது மட்டுமல்ல, வி.ஐ.பி. நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இன்று மாலை 6 மணிக்கு பிறகு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கவும் தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது. வாக்குப்பதிவு தொடங்கும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. #Loksabhaelections2019 #ElectionCommission
    Next Story
    ×