என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்தமல்லி தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் - வைதியநாதன் வாக்குறுதி
    X

    பூந்தமல்லி தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் - வைதியநாதன் வாக்குறுதி

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் பாரிவாக்கம் க.வைதியநாதன் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், கோளப்பன்சேரி, வயலாநல்லூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElecltions2019

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் பாரிவாக்கம் க.வைதியநாதன் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், கோளப்பன்சேரி, வயலாநல்லூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், பூந்தமல்லி தொகுதியில் இளம் தலைமுறையினரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றார்.

    அவருடன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஒன்றிய செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, சி.ஒய்.ஜாவித் அகமத், டி.பத்ம நாபன், வயலை நடராஜன், இரா.சங்கர், சத்தியமூர்த்தி, ஜி.தமிழ்வாணன் , ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். #LokSabhaElecltions2019

    Next Story
    ×