என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்றும் வருமான வரி சோதனை- உயர் நீதிமன்றத்தில் துரைமுருகன் மகன் முறையீடு
    X

    இன்றும் வருமான வரி சோதனை- உயர் நீதிமன்றத்தில் துரைமுருகன் மகன் முறையீடு

    பிரசாரம் செய்ய முடியாதபடி தனது வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாக திமுக வேட்பாளரும் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Duraimurugan #KathirAnand
    சென்னை:

    திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அவரது மகனுக்கு சொந்தமான கல்லூரிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

    இந்நிலையில், வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில்  கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



    இதற்கிடையே வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தேர்தல் நேரத்தில் சோதனை நடைபெறுவதால் தேர்தல் பணி மேற்கொள்ள முடியவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, இது தொடர்பாக துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #Duraimurugan #KathirAnand
    Next Story
    ×