என் மலர்

  செய்திகள்

  புதுவையில் ஆட்சி மாற்றம் வரும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
  X

  புதுவையில் ஆட்சி மாற்றம் வரும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்று தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #nrcongress #admk
  புதுச்சேரி:

  புதுவை பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதுவையில் பிரசாரம் செய்தார்.

  மதகடிப்பட்டு, வில்லியனூர், ராஜீவ்காந்தி சிலை சதுக்கம், மரப்பாலம், தவளகுப்பம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

  பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி. மு.க.கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர்கள் 2 பேரையும் தேர்வு செய்தால் புதுவையின் பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

  புதுவையில் நிலவும் பிரச்சினைகளை களைவதில் நல்ல உறுப்பினர்களாக அவர்கள் செயல்படுவார்கள். புதுவை மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கை மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால் மாநில அந்தஸ்து பெற்றுத்தர உறுதியாக செயல்படுவார். இந்த முயற்சிக்கு அ.தி.மு.க. உறுதுணையாக நின்று முழு முயற்சி எடுக்கும். புதுவையில் 3 ஆண்டுகளாக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

  அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. மக்களுடைய தேவைகளையும், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய தொலைநோக்கு திட்டங்களையும் பெறுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. மாநில மக்கள் வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்றனர். ஏதோ ஒரு நாடகம் நடத்துவது போல ஆளும் கட்சி நடந்து கொண்டிருக்கிறது.

  நாங்கள் அதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும். இங்கு ஒரு நல்ல ஆட்சி, நிலையான ஆட்சி, மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கான ஆட்சி மலரும்.

  இவ்வாறு அவர பேசினார். #opanneerselvam #nrcongress #admk
  Next Story
  ×