என் மலர்

  செய்திகள்

  உடலில் மறைத்து கடத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள்
  X
  உடலில் மறைத்து கடத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள்

  சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ரூ.1.36 கோடி சிக்கியது - 4 பேரிடம் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ரூ.1.36 கோடி பணம் சிக்கியது. ஆந்திராவை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LSPolls #ElectionFlyingSquad
  சென்னை:

  தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  சென்னையிலும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களுடன் மோட்டார் சைக்கிள்களும் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. பறக்கும் படை அதிகாரிகள் போலீசாரின் துணையுடன் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

  இதனால் பறக்கும்படை சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக பஸ்களிலும் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஒரு சிலர் சைக்கிள்களிலும் பணத்தை பைகளில் போட்டு தொங்க விட்டுச் செல்கிறார்கள். இதுபோன்று பணத்தை எடுத்துச் செல்லும் நபர்களை பிடிக்கவும் போலீசார் இப்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

  சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் ரோட்டில் இன்று காலை 6.45 மணியளவில் சிட்டி டவர் ஓட்டல் அருகில் சந்தேகத்துக்கிடமாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வழியாக சென்ற போக்குவரத்து போலீஸ் ஏட்டுகள் மதியழகன், பரமசிவம் ஆகிய இருவரும் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

  உடனடியாக பூக்கடை போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது 4 பேரும் உடலில் எதையோ பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் அவர்களது சட்டையை கழற்றி சோதனை செய்தனர். அப்போது 4 பேரும் தங்களது உடலில் ரூ.1 கோடியே 36 லட்சம் பணத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தினர்.

  பிடிபட்ட 4 பேரும் பாஷா, சீனிவாசலு, ஆஞ்சநேயலு, ஷேக்சலீம் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஆம்னி பஸ் மூலம் சென்னைக்கு இந்த பணத்தை கடத்தி வந்துள்ளனர்.  4 பேரும் பணத்தை தனித்தனியாக பிரித்து தங்களது சட்டைக்குள் மறைத்து எடுத்து வந்துள்ளனர். இந்த பணம் எதற்காக எடுத்து வரப்பட்டது? யாருடைய பணம்? என்பது தெரியவில்லை. முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.1.36 கோடியை போலீசார் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். தேர்தல் செலவுக்காக இந்த பணம் கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

  சென்னை திருநீர்மலை பகுதியில் பறக்கும்படை அதிகாரி கவிதா நடத்திய சோதனையில் ரூ.72 ஆயிரம் பணம் பிடிபட்டது. சந்திரமோகன் என்பவரின் காரில் நடத்திய சோதனையில்தான் இந்த பணம் பிடிபட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #LSPolls #ElectionFlyingSquad

  Next Story
  ×