என் மலர்

  செய்திகள்

  அதிமுக கூட்டணி தலைவர்களை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் - எடப்பாடி பழனிசாமி
  X

  அதிமுக கூட்டணி தலைவர்களை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் - எடப்பாடி பழனிசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக கூட்டணி தலைவர்களை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami #ADMK

  பொன்னேரி:

  முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னேரியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

  மத்தியில் நிலையான, வலுவான மோடியின் ஆட்சி மீண்டும் அமைய அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நான் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் வருவதில்லை என்று பொய்யான தகவலை மு.க. ஸ்டாலின் பரப்பி வருகிறார்.

  தமிழக நலனுக்காக அ.தி.மு.க. அமைத்த மெகா கூட்டணியில் விருப்பப்பட்டு பா.ம.க., தே.மு.தி.க. தா.மா.க. போன்ற கட்சிகள் சேர்ந்துள்ளன. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்களை தரமற்ற முறையில் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். இந்த திமிர் பேச்சை அவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

  அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை முத்தானது. ஆனால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பொய்யானவை. ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும் தேர்தலுக்குப் பின்னர் அத்திட்டத்தை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.

  இவ்வாறு அவர் பேசினார்.


  முன்னதாக எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-

  புரட்சித்தலைவி ஜெயலலிதா இருந்தால் எப்படி கூட்டணி அமைப்பாரோ அது போல ஒருமித்த கருத்துடைய கூட்டணியை அமைத்து இருக்கிறோம். நம்முடைய மெகா கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொறாமை படுகிறார். கூட்டணி வைப்பது கட்சிகளுடைய விருப்பம். ஓவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கின்றது. அந்தந்த கட்சியின் விருப்பத்தின்படிதான் கூட்டணி வைப்பார்கள். தி.மு.க.வுடனா கூட்டணி வைப்பார்கள்?

  கூட்டணி வைப்பதை எல்லாம் விமர்சனம் செய்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

  தி.மு.க கூட்டணி வெத்து வேட்டு கூட்டணி. மக்கள் பலமில்லாத கூட்டணி. மக்கள் சக்தி இல்லாத கூட்டணி. எனவே நம்மை பற்றி விமர்சனம் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி. எங்களை பற்றி எந்த விமர்சனமும் செய்திட தி.மு.க. தலைவருக்கு எந்த தகுதியும் இல்லை.

  இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #EdappadiPalaniswami #ADMK

  Next Story
  ×