என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதியம்புத்தூரில் ரூ.40 ஆயிரம், செல்போன் திருடிய வாலிபர்
- நீலாவதி அடகு வைத்திருந்த நகையை திருப்புவதற்காக வீட்டில் உள்ள மேஜையில் ரூ.40 ஆயிரம் வைத்துவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.
- விசாரணையில் மாடசாமி என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் மேல மடத்தைச் சேர்ந்தவர் நீலாவதி ( வயது 45). இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று நீலாவதி வங்கியில் அடகு வைத்திருந்த நகையை திருப்புவதற்காக வீட்டில் உள்ள மேஜையில் ரூ.40 ஆயிரம் வைத்துவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.
கடைக்கு சென்று விட்டு வந்து பார்த்தபோது மேஜையில் இருந்த பணம் ரூ.40 ஆயிரம் மற்றும் செல்போனை காணவில்லை. இது குறித்து நீலாவதி புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் புதியம்புத்தூர் கீழத் தெருவை சேர்ந்த மாடசாமி (45) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story