என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே சாரயம் விற்ற வாலிபர் கைது: 3 பேர் தப்பியோட்டம்
- முருகன்(வயது 45) என்கிற வெள்ளரி முருகன் தனது வீட்டின் பின்புறம் சாரயம் விற்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசாரை பார்த்ததும் மூன்றுபேரும் தப்பியோடினர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த முருகன்(வயது 45) என்கிற வெள்ளரி முருகன் தனது வீட்டின் பின்புறம் சாரயம் விற்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றபோது முருகன் சாரயம் விற்றுக் கொண்டிருந்தார்
. அப்போது போலீசாரை பார்த்ததும் முருகனுடன் இருந்த அமாவாசை அவரது மனவைி லதா(42), மற்றும் வெள்ளரி முருகனின் தாயார் ராஜம்(60) ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். மேலும் முருகனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து தப்பியோடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






