என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நிலக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
- குடி போதையில் பெண்ணை தாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசாரை வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி விஜயா (வயது 45). சம்பவத்தன்று இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சேதுபதி (27) என்பவர் குடி போதையில் தகராறு செய்து தாக்க முன் வந்தார்.
இதை தடுக்க வந்த அவரது மகன் பிரேம் குமாரையும் கம்பியால் தாக்கினார். பலத்த காயமடைந்த விஜயா நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சேதுபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






