என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 3 மாதமாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
- வள்ளியூர் கேசவனேரியை சேர்ந்த செந்தில்குமார் மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
- விசாரணைக்கு ஆஜராகாமல் செந்தில்குமார் தலைமறைவாக இருந்து வந்தார்.
நெல்லை:
மானூர் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2008 - ம் வருடம் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் வள்ளியூர் கேசவனேரியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 33) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி மானூர் போலீசார் இன்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Next Story






