search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலையில் முடிந்த பிறந்தநாள் விழா தொழிலாளியை குத்தி கொன்ற வாலிபர் கைது மேலும் 2 பேருக்கு வலை
    X

    கொலை செய்யப்பட்ட அருள்குண சேவியர்.

    கொலையில் முடிந்த பிறந்தநாள் விழா தொழிலாளியை குத்தி கொன்ற வாலிபர் கைது மேலும் 2 பேருக்கு வலை

    • பிறந்தநாள் விழாவில் நடந்த மோதலில் தொழிலாளியை குத்தி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்குணசேவியர்(34). மர விற்பனை செய்து வந்தார். இவரும் லிதியாமேரி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அருள்குணசேவியர் நேற்றிரவு அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது வேடபட்டியை சேர்ந்த மேலும் சில நண்பர்கள் வந்துள்ளனர்.

    பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டியபிறகு அவர்கள் அனைவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அருள்குணசேவியருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் அவரை கத்தியால் தொடையில் குத்தினர். தன்னை குத்தியவரை தாக்குவதற்காக அருள்குணசேவியர் சென்றபோது அவரது நெஞ்சிலும் கத்திக்குத்து விழுந்தது.

    இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு ேமாட்டார் சைக்கிளில் தூக்கி வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நகர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் இந்திராகாலனியை சேர்ந்த காந்தி மகன் குட்டிமணி என்ற பரமசிவம்(30) என்பவரை கைது செய்தனர்.

    அவர் போலீசில் தெரிவிக்கையில் குடிபோதையில் தன்னை தரக்குறைவாக பேசியதால் குத்தி கொன்றதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து குட்டிமணியை கைது செய்து இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட குணசேவியர் மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொலையாளி குட்டிமணி எப்போதும் தனது பைக்கில் கத்தி அல்லது அரிவாளை பாதுகாப்புக்காக வைத்திருப்பாராம். இதனால் பைக்கில் இருந்த கத்திைய எடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×