என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
  X

  காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காதலர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம்செய்து கொண்டனர்.
  • 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

  திருப்பூர்:

  ஊட்டியை சேர்ந்தவர் சுஜித்குமார். இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது திருப்பூர் சூசையாபுரத்தை சேர்ந்த சுஜிதா(19) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகி வந்தனர்.

  பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவாகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து காதலர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம்செய்து கொண்டனர்.

  தொடர்ந்து இருவரும் பிச்சம்பாளையம்புதூர் ஸ்ரீ நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருமணமான 4 மாதத்தில் திருமண தம்பதிகள் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மேலும் சுஜித் குமார் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சுஜிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

  Next Story
  ×