என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மாவட்ட அறிவியல்   மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
    X

    உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

    • ‘மிகுதியான மக்கட்தொகையினால் வளர்ச்சி மற்றும் இயற்கையின் மீது ஏற்படும் விளைவு’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • ஏ-4 அளவு வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். தேவையான அனைத்து பொருட்களும் போட்டியில் பங்கு பெறுபவர்கள் கொண்டு வரவேண்டும்

    நெல்லை:

    உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் 'மிகுதியான மக்கட்தொகையினால் வளர்ச்சி மற்றும் இயற்கையின் மீது ஏற்படும் விளைவு' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் 8 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான போஸ்டர் உருவாக்குதல் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறிவியல் மையத்திற்கு நேரில் சென்று கலந்து கொள்ளலாம்.

    ஏ-4 அளவு வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். தேவையான அனைத்து பொருட்களும் போட்டியில் பங்கு பெறுபவர்கள் கொண்டு வரவேண்டும் என்று அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசின் கொரானா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் தெரிவித்துள்ளார்.

    மேலும் விபரங்களுக்கு போட்டியாளர்கள் 94429 94797 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×